கலிபோர்னியா நகரை சேர்ந்தவர் பிரான்டன் மேக்ஸ்பீல்டு (29). இவர் 7 வயது சிறுவனாக இருந்த போது அவரை பணிப்பெண் ஒருவர் பராமரித்து வந்துள்ளார். அப்போது சிறுவனது வீட்டில் கைத்துப்பாக்கி ஒன்று இருந்துள்ளது. பணிக்கு வந்த பெண் துப்பாக்கியை எடுத்து அதில் இருந்த குண்டுகளை வெளியே எடுக்க முயன்றுள்ளார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த விபத்தில் சிறுவனின் முதுகிலும், கழுத்து பகுதியிலும் குண்டு காயம் ஏற்பட்டது. இரண்டு இடங்களில் குண்டு பாய்ந்ததால் சிறுவனது உடல் கழுத்து பகுதிக்கு கீழே செயலிழந்து போனது.
இந்த நிலையில் கடந்த 2003ம் ஆண்டு துப்பாக்கியை தயாரித்த நிறுவனம் மீது சிறுவன் வழக்கு பதிவு செய்துள்ளான். துப்பாக்கியில் உள்ள கோளாறுகளை சரி செய்யாததன் காரணமாகத்தான் துப்பாக்கி எதிர்பாராமல் வெடித்தது என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
இதனைஅடுத்து சிறுவனுக்கு 24 மில்லியன் டாலர் இந்திய மதிப்பில் சுமார் 350 கோடி இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது.
இழப்பீடு வழங்க அந்த நிறுவனம் ஒப்பு கொண்ட போதிலும் வங்கியில் போதுமான பணம் இல்லாததால் தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை முழுவதுமான விற்பனை செய்த பின்னர் இழப்பீட்டை வழங்குகிறோம் என நிறுவனம் உறுதி அளித்தது.
இந்த விவகாரத்தை அறிந்த சிறுவன் ஒரு அதிரடி முடிவியை எடுத்துள்ளான். எனக்கு நேர்ந்த விபத்து போல யாருக்கும் நிகழ கூடாது என முடிவெடுத்த சிறுவன் நிறுவனத்திற்கு தகவல் ஒன்றை அனுப்பினான்.
அதில், உங்களிடம் உள்ள அனைத்து துப்பாக்கிகளையும் அழித்து விடுங்கள். எனக்கு நீங்கள் இழப்பீடு தர வேண்டாம் என கோரி உள்ளான்.
ஆனால் இது தொடர்பான முடிவுகள் எடுப்பதற்குள் கடந்த சனிக்கிழமை அன்று தற்போது 29 வயதான அந்த சிறுவன் கலிபோர்னியா நகரில் உள்ள அவரது வீட்டிலேயே உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இழப்பீட்டு தொகையை வாங்காமல் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.