Loading...
யட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீகஹவெல்ல பகுதியில் யுவதி ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
நேற்று (07) மாலை 5.30 மணியளவில் களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த போதே குறித்த பெண் காணாமல் போயுள்ளார்.
யட்டியாந்தோட்டை பகுதியை சேர்ந்த 18 வயதுடைய ஜோன் ஞானமேரி எனும் பெண்ணே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
Loading...
காணாமல் போன யுவதியை தேடும் நடவடிக்கைகளில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யட்டியாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...