உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடத்திய மனித வெடிகுண்டு ஒருவரிற்கு சொந்தமான வெல்லம்பிட்டிய செப்பு தொழிற்சாலையில் பணியாற்றி வந்த கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லாவின் விளக்கமறியல் எதிர்வரும் ஜூலை 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது, ந்தேக நபர் மீதான விசாரணைகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதாக பயங்கரவாத புலனாய்வு பிரிவு (டிஐடி) அறிவித்தது.
அதன்படி, ஜூலை 15ம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்போது விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதவான் லங்கா ஜெயரத்ன டிஐடியிடம் அறிவுறுத்தினார்.
சங்க்ரி-லா தற்கொலை குண்டுதாரி இல்ஹாம் இப்ராஹிமுக்கு சொந்தமான செப்பு தொழிற்சாலையில் பணியாற்றிய 10 ஊழியர்கள் கைதாகியிருந்தனர். அவர்களில் அப்துல்லாவும் ஒருவர்.