களனி கங்கையில் நீராடச்சென்று காணாமல் போன யுவதி ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எட்டியாந்தோட்டை மீகஹவெல்ல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய ஜோன் ஞானமேரி என்ற யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்ரனர்.
குறித்த யுவதி, நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30 மணிஅளவில் களனி கங்கைகையில் நீராட சென்று நீரில் அடித்துச் செல்லப்பட்டும் காணாமல் போயிருந்ததாகவும் பின்னர் பொலிஸாரும் பிரதேச மக்களும் இனைந்து தேடுதலில் ஈடுபட்டபோதிலும் யுவதியின் உடல் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று காலை கொழும்பில் இருந்து கடற்படையின் விசேட சுழியோடிகள் வரவழைக்கப்பட்டு களனி கங்கையில் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இதன்போதே குறித்த யுவதியின் சடலம் மீட்கப்பட்டதாக எட்டியாந்தோட்டை பொலிஸார் குறிப்பிட்டனர்.