அவுஸ்திரேலியாவில் £17 மில்லியன் லொட்டரியில் வென்ற நபர் மொத்த பணத்தையும் தவறான முதலீட்டால் இழந்துள்ளார்.
ஷெரீப் கிர்கிஸ் என்பவருக்கு தற்போது 35 வயதாகிறது. இவருக்கு கடந்த 2007-ல் 23 வயதிருக்கும் போது லொட்டரியில் £17 மில்லியன் பரிசு விழுந்தது.
ஆனா இவ்வளவு பெரிய பரிசு பணம் அவர் வாழ்க்கையை வசந்தமாக மாற்றிவிடவில்லை என்றால் நம்பமுடிகிறதா?
ஆம், ருசல் போலிவிகா என்ற நபரின் வழிகாட்டுதலோடு பரிசு பணத்தில் மதுபான விடுதியை விலை கொடுத்து வாங்கியது, சொகுசு படகை வாங்கியது போன்ற விடயங்களில் ஷெரீப் முதலீடு செய்தார்.
ஆனால் அவர் செய்த அனைத்து தொழில்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்தன.
இதன் காரணமாக சில ஆண்டுகளில் அனைத்து பணத்தையும் ஷெரீப் இழந்தார்.
இதனால் பல கோடிகள் பணத்தை வைத்திருந்த ஷெரீப் சில ஆண்டுகளில் நடுத்தெருவுக்கு வரும் நிலைக்கு தள்ளப்பட்டார்
இதை தொடர்ந்து தன்னுடைய பணத்தை முதலீடு செய்ததில் அனைத்திலும் உதவியாக இருந்த ருசல் தன்னை ஏமாற்றிவிட்டதாக அவர் மீது ஷெரீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியாகியுள்ள நிலையில் ஷெரீப்புக்கு £1.1 மில்லியன் பணம் மட்டும் ருசல் கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.