யட்டியாந்தோட்ட களனி கங்கையில் நீராட சென்ற நிலையில் காணாமல் போனதாக கூறப்பட்ட யுவதி சடலமாக மீட்கபட்டுள்ளதாக யட்டியாந்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த யுவதி காணாமல் போயிருந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் நீரில் அள்ளுண்டு யுவதி சென்ற நிலையில் யுவதியினை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து ஈடுபட்ட போதும் யுவதி கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலயில் இன்று காலை கொழும்பில் இருந்து கடற்படடையினர் வரவழைக்கபட்டு களனி கங்கையில் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்ட போதே, யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சடலமாக மீட்கபட்ட யுவதி யட்டியாந்தோட்ட மீகஹவெல்ல பகுதியை சேர்ந்த 18 வயதுடைய ஜோன் ஞானமேரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மீட்கபட்ட யுவதியின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக, கரவனல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை நிறைவடைந்த பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட உள்ளதாக தெரிவித்த பொலிஸார் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.