பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக உள்ளே சென்று நேற்றைய தினத்தில் முதல் போட்டியாளராக வெளியேறியவர் பாத்திமா பாபு.
இவர் பிக்பாஸ் வீட்டில் அனைவரையும் அனுசரித்து சென்றது மட்டுமின்றி பாசத்துடனும் நடந்து கொண்டவர். தற்போது தான் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த அனுபவத்தினை பேட்டியாக கொடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், பொதுவாகவே நான் ஒரு நபரை அவதானித்தால் அவர் எப்படிப்பட்டவர் என்று கணிப்பது என்னுடைய பழக்கம். பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு போட்டியாளர்களைப் பற்றிய உண்மைகளை தற்போது கூறியுள்ளார்.
அபிராமி சிறிய பிரச்சினை என்றாலும் அதனை பெரிதாக எடுத்துக்கொண்டு தன்னைத் தானே தாக்கிக் கொள்வார். சமீபத்தில் தன்னைத் தானே நகத்தினால் கை, கழுத்து என காயங்களை ஏற்படுத்தினார். பின்பு மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று வந்தார். நான் இம்மாதிரி இருக்கக்கூடாது என்று அவருக்கு அறிவுரை கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் வனிதா பற்றி அவர் கூறுகையில், பிக்பாஸ் வீட்டில் தான் நினைத்தது நடக்க வேண்டும் என்பது மட்டுமின்றி தேவையற்ற வாக்குவாதங்களை அதிகமாக செய்கிறார் என்றும், அபிராமி சிறிய விடயத்துக்குக் கூட தன்னைத் தானே தாக்கிக்கொள்கிறார் அவர் இந்த வீட்டில் இருக்க வேண்டாம் என்று தெரிவித்த வனிதாவே அவரை மறுபடியும் அந்த நிலைக்கு கொண்டு செல்வது எப்படி சரியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
கவின் பற்றி கூறுகையில், தனது வயதுள்ளவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ளும் குணம் கொண்ட கவின், அத்தை பெண்களிடம் ஜாலியாக பேசுவதாக கொண்டாலும், அத்தை வீட்டில் பெண்கள் மட்டும் தனியாக இருந்துவிட மாட்டார்கள். பெற்றோர்கள் என்று பெரியவர்களும் இருக்கத் தான் செய்வார்கள். பிக்பாஸ் வீட்டில் அவ்வாறு வீட்டில் இருக்கும் பெரியவர்களும் அப்படித்தான் என்று தெரிவித்துள்ளார்.
தன்னைப் போன்று பெண் வேடமணிந்த சரவணன் பற்றி கூறுகையில், மேக்கப் எனக்கு சுத்தமாக பிடிக்காது. சமீபத்தில் எனக்கு முகத்தில் ஏற்பட்ட குறைகளை மறைப்பதற்காகவே இவ்வாறு மேக்கப் செய்துள்ளதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். ஆனால் இதனை டாஸ்க் ஆரம்பத்திலே அவரிடம் கூறியதாகவும், ஆனால் அவர் அதனை பொருட்படுத்திக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.