அமலாபால் நடித்த “ஆடை” படத்தின் டீசர் கடந்த வாரம் பெரும் வரவேற்பையும், சர்ச்சையும் ஏற்படுத்தியது என்றே கூறலாம். ஆனால் திரை பிரபலங்கள் மத்தியில் அமலாபாலின் துணிச்சலான நடிப்பிற்காக பலரும் பாராட்டி வருகின்றனர்.
இப்படம் அடுத்த வாரம் ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. ஆடியோ வெளியீட்டு விழாவில் அமலாபால் பேசுகையில் இயக்குனர் ரத்னகுமார் இந்த கதையை என்னிடம் கூறும்போது சற்று யோசித்தேன். ஆனால் படத்தின் கதாபாத்திரத்தில் வலு அதிகமாக இருப்பதால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
படத்தில் ஒரு சில காட்சியில் ஆடை இல்லாமல் நடிக்க வேண்டும் என்று கூறினார். அப்போது அந்த காட்சியை மட்டும் நடிக்கும் போது 15 பேர் இருந்தனர் அந்த 15 டெக்னீஷியன்கள் என்னை பாதுகாப்பாக பார்த்து கொண்டனர். எல்லோரது மொபைலை பறிமுதல் செய்து இயக்குனர் அதன்பின் தான் படப்பிடிப்பே எடுத்தார். பாஞ்சாலிக்கு 5 கணவர்கள் போல் எனக்கு 15 கணவர்கள் மாதிரி பாதுகாப்பை அளித்தனர் என்று கூறியுள்ளார்.