இசைக்கு மயங்காதவர்கள் இந்த உலகில் யார் தான் இருக்க முடியும்.
தமிழர் வாழ்வில் ஒன்றென உயிரும் உடலும் போலக் கலந்ததுதான் பாடல்கள். பிறப்பு, திருமணங்கள் முதல் இறுதி ஊர்வலம் வரை, இன்பம் முதல் துன்பம் வரை, எல்லாவற்றுக்கும் தமிழனின் துணையாக இருப்பதுதான் இசை.
இசையால் முடியாதது எதுவுமில்லை. மனதினை தீண்டும் மெல்லிய பாடல்கள் மயிலிறகால் வருடுவது போல இருக்கும்.
இந்த கனடா பெண்மணியின் குரலில் நம் தமிழ் பாடல்…
இந்த கனடா பெண்மணியின் குரலில் நம் தமிழ் பாடல்…
Publiée par குமுதம் – Kumudam sur Vendredi 5 juillet 2019
தமிழர்கள் இசை மீது கொண்ட பற்று போலவே, தமிழ் பாடல்கள் மீது வெளிநாட்டவர்கள் பற்று வைத்துள்ளனர். கனடாவில் உள்ள இளம் யுவதி ஒருவர் பாடிய பாடல் ஒன்று சமூகவலைத்தளத்தில் உலாவி வருகின்றது.
இவரின் பாடலும் குரலும், எத்தகைய மனதையும் மாற்றும் வலிமை கொண்டதாக உள்ளது. இதேவேளை, அவரின் திறமையை பாராட்டி பல்வேறு பகுதியில் இருந்து வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.