சாதி மாறி திருமணம் செய்பவர்களை ஆணவக் கொலை செய்வது நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. மேற்கு வங்க மாநிலம் மகேந்திரடோலா என்ற கிராமத்தில் பெற்றோர் எதிர்ப்புக்கு மீறி காதல் செய்த தனது 16 வயது மகளை துண்டு துண்டாக வெட்டி கொன்று உடலை கட்டைப்பையில் வைத்து கங்கை ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகளை ஆணவக்கொலை செய்த பெற்றோர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மகேந்திரடோலா கிராமத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தன் பக்கத்து கிராமத்தில் வசிக்கும் அச்சிந்தியா மொண்டல் மீது காதல் ஏற்பட்டது. இந்த காதல் சம்பவம் பெற்றோருக்கும் உறவினருக்கும் தெரியவந்தது.
இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த பிரச்சினை பொலிஸ் நிலையம் வரை சென்றதால் அங்கு வைத்து கண்டித்துள்ளனர். பெற்றோர்களின் கண்டிப்பையும் மீறி இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர்.
இதையறிந்த பெற்றோர் கடந்த வெள்ளிக்கிழமை தன் மகளை அடித்து கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி கட்டைப்பையில் வைத்து கங்கை ஆற்றில் வீசி விட்டனர்.
ஊர்மக்கள் தகவலின் பேரில் இதையறிந்த பொலிசார் மாணவியின் வீட்டிற்கு சென்று, மாணவியின் அப்பா டிரின் மொண்டல், அம்மா சுமதி மொண்டல் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் ஆணவக் கொலையாக இருக்கக்கூடும் என சந்தேகித்து இருவரையும் பூட்னி காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
பொலிசார் இருவரையும் விசாரித்ததில் தனது மகள் பக்கத்து ஊர்க்காரனான அச்சிந்தா மொண்டல் என்பவரை காதலித்ததாகவும் நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தங்களின் பேச்சை கேட்காத காரணத்தால் மகளை கொலை செய்து ஆற்றில் வீசினோம் என கூறியதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து ஐபிசி கண்காணிப்பாளரின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய பொலிசார், ஆற்றிலிருந்து உடலை மீட்க முயற்சிகள் நடந்து வருவதாகவும், சடலத்தை கண்டுபிடிப்பதற்காக மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.