எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை கொண்டுவரவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்தவகையில் எரிபொருள் விலையை மறு ஆய்வு செய்ய நிதியமைச்சினால் நியமிக்கப்பட்ட குழு இன்று (புதன்கிழமை) கூடுகின்றது.
ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் படி, ஒரு லிட்டர் 92 ஒக்டைன் பெட்ரோலின் விலை மூன்று ரூபாயால் அதிகரிக்கப்பட்டது, அதே நேரத்தில் 95 ஒக்டைன் பெட்ரோலின், சூப்பர் டீசல் மற்றும் ஆட்டோ டீசல் விலை அதிகரிக்கப்படவில்லை.
மேலும் உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை ஜூன் 10 ஆம் திகதி 62 டொலர் எனக் குறிக்கப்பட்டிருந்தாலும், நேற்றைய நிலவரப்படி 64.72 டொலர்களாக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவால் ஈரானுக்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளே கச்சா எண்ணெயின் விலை உயர்வுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.