Loading...
மன்னார் திருக்கேதீஸ்வர வீதி வளைவை மீண்டும் கட்டுவதற்கு இடைக்கால தடை உத்தரவைக் கண்டித்து மாபெரும் கண்டனப் பேரணியொன்று வவுனியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும்.12ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு வவுனியா கந்தசாமி கோவில் முன்றலில் குறித்த கண்டனப்பேரணி ஆரம்பமாகவுள்ளது.
Loading...
இப் பேரணியானது வவுனியா மாவட்ட செயலகத்தினை சென்றடைந்து அங்கு மகஜரொன்றும் மகஜர் கையளிக்கப்படவுள்ளது.
திருக்கேதீஸ்வர ஆலய வளைவை அமைப்பதற்கு மன்னார் ஆயரின் வலியுறுத்தலையடுத்து, மன்னார் பிரதேசசபை தவிசாளர் தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading...