Loading...
மத்தியவங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆய்வறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க எதிர்பார்த்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை கூறினார்.
Loading...
போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான குழுவினால் தயாரிக்கப்பட்ட குறித்த அறிக்கையினை இன்று அல்லது நாளை ஜனாதிபதியிடம் வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனடிப்படையில் குறித்த அறிக்கையின்படி மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு வெளிப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
Loading...