அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்துள்ள ஹிலாரி மீது விசாரணை நடத்தும் தனது முடிவை டொனால்ட் டிரம்ப் கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது ராணுவ தகவல்களை தனது சொந்த மின்னஞ்சல்களில் பகிர்ந்த குற்றத்திற்காக ஹிலாரியை சிறையில் அடைப்பேன் என டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு அவர் தனியாக ஒரு வழக்கறிஞரை நியமித்து ஹிலாரி மீது விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாயின.
அதே சமயம், டிரம்பின் நடவடிக்கைக்கு முன்னதாக ஹிலாரிக்கு ஒபாமா பொது மன்னிப்பு வழங்க வாய்ப்புள்ளது என்ற தகவல்களும் வெளியாயின.
இந்நிலையில், அமெரிக்காவில் ஒளிப்பரப்பாகவும் பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் ‘ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் ஹிலாரி மீது எவ்வித விசாரணையும் தனது அரசு மேற்கொள்ளாது’ என டிரம்ப் கூறியதாக அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சில மணி நேரங்களுக்கு முன்னர் வெளியான இச்செய்தியால் ஹிலாரியின் ஆதரவாளர்கள் உற்சாகத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
ஆனால், டொனால்ட் டிரம்பிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த ஹிலாரிக்கு ஆதரவாக செய்தி நிறுவனம் தகவல் விட்டுருக்கலாம் எனவும், ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் டிரம்ப் ஹிலாரி மீது விசாரணை நடத்துவாரா? மாட்டாரா? என்பதற்கு தற்போது உறுதியான தகவல்கள் இல்லை என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.