30 இடங்களில் கத்திகுத்துகளுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடலை பார்த்து தடவியல் நிபுணர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினாவை சேர்ந்த டியாகோ ரோமன் என்கிற 12 வயது சிறுவன் புதன்கிழமையன்று மாயமாகியுள்ளான். அடுத்த நாள் வடக்கு அர்ஜென்டினா மாகாணமான சாண்டா ஃபேவில் உள்ள ரெக்ரியோ நகராட்சியில் சிறுவனின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் அறிந்து வந்த தடவியல் நிபுணர்கள், சிறுவனின் உடலில் 30க்கும் மேற்பட்ட கத்திக்குத்து காயங்கள் இருப்பதாக கூறியுள்ளனர்.
அதேசமயம் சிறுவனின் பிறப்புறுப்பும் துண்டிக்கப்பட்டுள்ளன என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தடவியல் நிபுணர் ஒருவர் கூறுகையில்,
நான் எனது வாழ்க்கையில் 3,000 க்கும் மேற்பட்ட பிரேத பரிசோதனைகளை செய்துள்ளேன். இதுபோன்ற ஒரு வழக்கை நான் பார்த்ததில்லை.
இந்த துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்ததில், இது போன்ற வழக்குகளை நான் சந்தித்ததில்லை. என்னைப் பொறுத்தவரை, இது ஒரு முழுமையான விஞ்ஞான விசாரணைக்கு தகுதியான ஒரு தனித்துவமான வழக்கு.
அந்த சிறுவன் கடைசியாக தனது வீட்டை விட்டு பள்ளிக்குச் சென்றபோது காணப்பட்டார். அவரது உடல் மறுநாள் அவர் விளையாடிய கால்பந்து கிளப்பின் துணைத் தலைவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு, அந்த இடத்தில் தூக்கி வீசப்பட்டதாக விசாரணையாளர்கள் நம்புகின்றனர். துப்பறியும் நபர்களால் இதுவரை எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இருப்பினும், சிறுவனின் தாயார் மரியா தனது முன்னாள் காதலனை குற்றம் சாட்டியுள்ளதாக என தெரிவித்துள்ளார்.