பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் நபர் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
மக்கள் அதிகம் எதிர்பார்த்துத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. கடந்த இரண்டு சீசன் போல் இந்த முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் முதல் ஆளாக பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார்.
இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் மதுமிதா, மீரா மிதுன், சேரன், சரவணன், மோகன் வைத்யா என ஐந்து பேர் உள்ளனர். நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாள் முதல் பார்வையாளர்களின் வெறுப்பை அதிகம் சம்பாதித்த வனிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கூறுகின்றனர்.
ஆனால் மக்கள் போடும் வாக்குகளின் அடிப்படையில் மட்டுமின்றி பிக்பாஸ் மனது வைத்தால் மட்டுமே ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அந்த வகையில் ஏற்கனவே வனிதாவை காப்பாற்றும் நடவடிக்கைகளை டாஸ்க் என்ற பெயரில் பிக்பாஸ் எடுத்துவிட்டதால் இந்த வாரம் வனிதா சேஃப் ஆகிவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து மோகன் வைத்யா வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. போக போக டாஸ்க் கடினமாக இருக்கும் என்பதால் சீனியர்களை வெளியேற்ற பிக்பாஸ் குழுவினர் திட்டம் போட்டு செயல்பட்டு வருகின்றனர்.