இந்தியாவில் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியின் வாயில் அருகே கருப்புநிற டேப்பால் சுற்றப்பட்டு ஒரு மர்ம பார்சல் இருந்துள்ளது.
இந்நிலையில் குறித்த பார்சல் கிடப்பதாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளியளவில் தகவல் கிடைத்தது.
இதையடுத்து உடனடியாக, மோப்ப நாய்களுடன் அங்கு விரைந்து சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் அந்த மர்ம பார்சலை கையில் எடுத்த அதிகாரிகள் பிரித்துப் பார்த்தனர்
பார்சலை பார்த்த அதிகாரிகள் அதற்குள் ஒரு கிலோ எடையுள்ள தங்கக்கட்டியை எடுத்துள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கடத்திவந்த பயணி சுங்கத்துறை அதிகாரிகளின் கெடுபிடிக்கு பயந்து அதை கீழே போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என கருதப்படுகின்றது.
இதேவேளை கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 35 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.