பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நாமினேஷனில் இந்த வாரம், மீரா மிதுன், மதுமிதா, சரவணன், வனிதா, மோகன் வைத்தியா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த வாரம் வனிதா தான் வெளியேற்றபட வேண்டும் என்று பெரும்பாலா ரசிகர்கள் விரும்பி வந்தனர். ஆனால் அதேவேளை வனிதா வெளியேறி விட்டால் நிகழ்ச்சியின் சுவாரசியம் போய்விடும் வெளியேறி வனிதா இருக்க வேண்டும் என்றும் கூறிவந்தனர்.
மேலும், இந்த வார நாமினேஷனில் இருந்து மோகன் வைத்யா வெளியேற போவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
ஆனால், இந்த இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகப்பெரிய ட்விஸ்டை கொடுத்துள்ளனர். இந்த வாரம் நாமினேஷனிலிருந்து அனைவரும் எதிர்பார்த்து போலவே வனிதா வெளியேற்றபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிலும் வனிதாவை கமல் வாங்கு வாங்குனு வாங்கியுள்ளாராம். இந்த வார நாமினேஷனை கமல் ஒரு பிராங்க் போல செய்து அனைவரையும் ஷாக்கில் ஆழ்த்தியுள்ளாராம்.