கனடாவிலுள்ள ஆடைக்கடை ஒன்றில் உடை மாற்றும் அறையில் கமரா பொருத்திய குற்றச்சாட்டில் தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 6ஆம் திகதி மாலை 4 மணியளவில் குறித்த சந்தேக நபர் ஆடை கடையில் அவதானிக்கப்பட்டுள்ளார். அந்தக் கடையின் ஆடை மாற்றும் அறையில் சிறிய பெட்டி ஒன்றை தரையில் வைத்துள்ளார்.
பின்னர் சோதனையிட்ட போது அந்த பெட்டிக்குள் கமரா ஒன்று இருந்ததாகவும் அதில் பல பெண்கள் ஆடை மாற்றும் காட்சி பதிவாகியிருந்ததாக கனடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சில மணி நேரங்களில் பின்னர் பெண் ஒருவர் மர்ம பொருள் ஒன்று உள்ளதாக அறிந்து கடையின் பாதுகாப்பு அதிகாரி மற்றும் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
உடனடியாக அவ்விடத்திற்கு சென்ற அதிகாரிகள் அதனை சோதனையிட்ட போது பெண்களின் படங்கள் மற்றும் காணொளிகள் பதிவாகியிருந்தமை உறுதியாகியுள்ளது.
சம்பவத்திற்கு அடுத்த நாள் 22 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் ரொரென்ரோவை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவர் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தகவல் வழங்க முன்வர தயங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.