கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் கல்வித்துறையில் இதுவரையில் இடம்பெறாத பாரிய புரட்சியை மேற்கொள்வதற்கு தம்மால் முடிந்திருப்பதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இருந்து கிடைத்த ஒத்துழைப்பின் அடிப்படையில் இதற்கான வேலைத் திட்டத்தை பூர்த்தி செய்ய முடிந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் அமைச்சர் உரையாற்றினார். அருண்பிரசாத் அமைப்பின் தலைவர் எம்.மாணிக்கவாசகத்தின் தனிப்பட்ட நிதி உதவியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வத்தளை ஹூனுப்பிட்டியவில் அமைந்துள்ள அருண் மாணிக்கவாசகம் இந்து தேசிய பாடசாலை வளவிலான காணியை கல்வி அமைச்சுக்கு வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
தேசிய ஒருமைப்பாடு அரச கருமமொழி, சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசனின் தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது.
இந்தப் பாடசாலையில் மும்மொழிகளிலும் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. இதேபோன்ற பாடசாலை ஒன்று சமீபத்தில் குருநாகலில் ஆரம்பிக்கப்பட்டது.