தற்போதைய அரசாங்கம் வீடு மற்றும் காணி உறுதிகளை வழங்குவதன் மூலம் கிராம மக்களின் கனவு நனவாவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பத்து இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உரிமையற்று வாழும் கண்டி மக்களுக்கு ஆயிரம் காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் பிரதமர் இன்று உரையாற்றினார்.
இந்த நிகழ்வு இன்று நாவலப்பிட்டி மத்திய வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இன்றைய தினம் காணி உறுதிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் பல வருட காலங்களாக அந்தக் காணிகளில் வாழ்ந்து வந்தபோதிலும் அவற்றுக்கு உறுதிப்பத்திரங்கள் இருக்கவில்லை. இந்த மக்கள் நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்புச் செய்துள்ளதாக பிரதமர் கூறினார்.
காணிகளுக்க உறுதிப்பத்திரங்களை வழங்குவதன் மூலம் அவர்களது நீண்டநாள் கனவு நனவாவதாகவும் அவர் கூறினார்.