Loading...
பத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்த ரிக்ஷா மீது பேருந்து மோதி விபத்திற்குள்ளானதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
அத்துடன் பேருந்தில் பயணித்தவர்கள் உள்பட 24 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாகிஸ்தானின் சங்கார் மாவட்டத்தில் கட்ராவ் என்ற பகுதியில் பத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துகொண்டிருந்த ரிக்ஷா மீது வேகமாக வந்த பேருந்து மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
Loading...
தகவலறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்புப்படையினர் தெரிவித்தனர்.
Loading...