Loading...
‘பாகுபலி படத்தின் இரண்டாம் பாகமான’ பாகுபலி 2′ படத்தில் முதல் பாகத்தை விட பிரமாண்டமான போர்க்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி கடைசி அரை மணி நேரம் இருக்கும் என்று படக்க்ழுழுவினர் தெரிவித்துள்ள நிலையில் இந்த போர்க்காட்சியின் ஒருசில வீடியோ க்ளிப்பிங்குகள் இன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து படகுழுவினர்களால் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்ததில் கிருஷ்ணா என்ற வீடியோ எடிட்டர் செய்த கைவரிசை என தெரியவந்தது.
Loading...
பின்னர் கிருஷ்ணாவை கைது செய்த போலீஸார் இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
Loading...