பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டாவது சீசனில் பல்வேறு மாற்றங்களை செய்திருந்தனர். அந்த வகையில் கடந்த சீசனில் பிக் பாஸ் சிறை, ஸ்மோக்கிங் ரூம், சீக்ரெட் பாஸ் என்று பல மாற்றங்களை செய்திருந்தனர். தற்போது அதே அம்சங்கள் இந்த சீசனிலும் தொடர்ந்து வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் கடந்த திங்கள்கிழமை அறிவிக்கபட்டது. இந்த வார நாமினேஷனில் வனிதா, சரவணன், மதுமிதா, சரவணன், மீரா, மோகன் வைத்யா மதுமிதா, இடம்பெற்றுள்ளனர். இந்த வாரம் வனிதா தான் வெளியேற்றபட வேண்டும் என்று பெரும்பாலா ரசிகர்கள் விரும்பி வந்தனர்.
மற்றொரு புறமோ வனிதா வெளியேறி விட்டால் நிகழ்ச்சியின் சுவாரசியம் போய்விடும் என்பதால் வனிதா இருக்க வேண்டும் என்றும் கூறி வந்தனர். மேலும், இந்த வார நாமினேஷனில் இருந்து மேலும், வைத்யா வெளியேற போவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் மோகன் வைத்யா காப்பாற்றபட்டுவிட்டார் என்று கமல் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷனிலிருந்து அனைவரும் எதிர்பார்த்து போலவே வனிதா வெளியேற்றபட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இதிலும் ஒரு ட்விஸ்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அது என்னவெனில் இந்த வாரம் வனிதா, ரகசிய அறை எனப்படும் சீக்ரெட் ரூமிற்கு செல்ல போகிறார் என்று கூறப்படுகிறது.
கடந்த சீசனில் வைஷ்ணவி இந்த ரகசிய அறையில் சில நாட்கள் இருந்து வந்தார். தற்போது இந்த சீசனில் வனிதா செல்லப்போகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. வனிதாவை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அனுப்பிவிட்டால் நிகழ்ச்சியில் சுவாரசியம் குறைந்துவிடும் என்பதால் இப்படியொரு ட்விஸ்டை கொடுத்துள்ளனர். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது இன்றைய நிகழ்ச்சியினை அவதானித்தால் மட்டுமே தெரியவரும்.
தற்போது மூன்றாவதாக வெளியான ப்ரொமோ காட்சியில் ஒருவரை காப்பாற்றுவதற்குரிய அட்டை வீட்டிற்குள் வைத்து தேடி அதனை சரவணன் எடுத்துள்ளார். இதிலிருந்து சரவணன் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.