லண்டனில் நடந்து வரும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 30 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டி, லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியுள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன், துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
அதன்படி மார்டின் கப்தில் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த தொடரில் தொடக்க வீரர் கப்தில் பெரிதளவில் ஓட்டங்கள் எதுவும் எடுக்கவில்லை.
அதேபோல் இந்தப் போட்டியில் 19 ஓட்டங்களிலேயே வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார்.
இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இவர்களின் கூட்டணியின் மூலம் நியூசிலாந்து அணி 100 ஓட்டங்களை எட்டியது. இந்நிலையில், பொறுமையுடன் ஆடிக்கொண்டிருந்த கேன் வில்லியம்சன் 30 (53) ஓட்டங்களில் இருந்தபோது, பிளங்கெட் பந்துவீச்சில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இந்த விக்கெட் நியூசிலாந்து அணிக்கு விழுந்த பெரிய அடியாகும். எப்போது நிலைத்து நின்று கடைசி வரை களத்தில் நிற்கும் வில்லியன்சன், இறுதிப்போட்டியில் 23வது ஓவரிலேயே அவுட் ஆனது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகியுள்ளது.
அவரைத் தொடர்ந்து அரைசதம் கடந்த நிக்கோல்ஸ் 55 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தற்போது டெய்லர் மற்றும் லாதம் இருவரும் விளையாடி வருகின்றனர். நியூசிலாந்து அணி 27 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 118 ஓட்டங்கள் எடுத்துள்ளது.