தமிழகத்தின் மதுரையில் இரண்டு காமுகர்களால் சீரழிக்கப்பட்ட சிறுமி 2 பிள்ளைகளுக்கு தாயான கொடுமை அரங்கேறியுள்ளது.
மதுரையில் தந்தையை இழந்த சிறுமி ஒருவர் தாயாருடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இவர்களது குடியிருப்புக்கு அருகாமையில் வசித்து வந்த விஜயகுமார் என்பவர், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி, அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்.
இதற்கு சிறுமியின் தாயார் வசந்தியும் உடந்தை என கூறப்படுகிறது. இதனிடையே விஜயகுமாரால் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அந்த குழந்தையை வெளியே யாருக்கும் தெரியாமல் வசந்தி ஒரு லட்சம் பணத்திற்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அழகு நிலையத்திற்கு வேலைக்குச் சென்ற சிறுமிக்கு வேலுச்சாமி என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவரும் திருமண ஆசை காட்டி சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
பிறந்த குழந்தையை என்ன செய்வதென்று தெரியாமல் தோழியிடம் கொடுத்துவிட்டு சிறுமி மாயமாகிவிட, அவர் வசந்தியின் தந்தையிடம் சிசுவை ஒப்படைத்துள்ளார்.
அவர் ஆத்திரத்தில் பச்சிளங்குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசியதால் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனையடுத்து சிறுமியின் தாய் வசந்தி, விஜயகுமார் மற்றும் வேலுச்சாமி ஆகிய மூவர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் வேலுச்சாமியை கைது செய்துள்ள காவல்துறையினர் எஞ்சிய இருவரையும் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரது பெண் குழந்தை தொட்டில் குழந்தை திட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிறுமி ஒருவர் அவரது 13 வயது முதல் 17 வயது வரை 4 ஆண்டுகள் இரண்டு காமுகர்களால் சீரழிக்கப்பட்டு பிள்ளையும் பெற்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.