தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 150 கிராம்
இஞ்சி – சிறிதளவு
பூண்டு – 10
முந்திரி – 10
மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன்
தனியாத் தூள் – ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகு – அரை ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
சோம்பு – கால் ஸ்பூன்
கசகசா – கால் ஸ்பூன்
பட்டை, கிராம்பு – சிறிதளவு
ஏலக்காய் – 2
ஜாதிக்காய் – சிறிதளவு
புதினா, கொத்தமல்லி – சிறிதளவு
நெய் – 4 ஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் – 1 ஸ்பூன்
சோயா சாஸ் – ஸ்பூன்
தயிர் – 1 ஸ்பூன்
பால் – 2 ஸ்பூன்
செய்முறை:
இஞ்சி பூண்டை விழுதாக அரைக்கவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பின்னர் முந்திரி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா, பட்டை, கிராம்பு, ஜாதிக்காய், புதினா கொத்தமல்லி தழையை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை போட்டு, அதில் இஞ்சி, பூண்டு விழுது, முந்திரி, மிளகு விழுது, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், தயிர், நெய், எலுமிச்சை சாறு, சோயா சாஸ், தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கலந்து ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். இத்துடன் சிக்கன் மசாலா கலவையை போட்டு, மிதமான தீயில் கிளறவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம். சிக்கன் வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவயான செட்டிநாட்டு முந்திரி சிக்கன் கிரேவி தயார்.