ரஷ்யாவில் 16 வயது இளம்பெண் ஒருவர் தமது கற்பை 4,000 பவுண்டு தொகைக்கு விற்பனை செய்ய இருப்பதாக இணையத்தில் விளம்பரம் செய்துள்ளார். இதை யூரி என்ற பெயரில் அறியப்படும் பாலி யல் தொழில் செய்யும் கும்பல் ஒன்று அறிந்து, அவரிடம் பேசி அவரை குறிப்பிட்ட பகுதிக்கு வரவழைத்துள்ளது.
மட்டுமின்றி, தங்களுக்கு அறிமுகமான நபரே அவர் எனவும், பாதுகாப்பான் இடம் அது எனவும், குறித்த பெண்ணிடம் யூரி என்ற கும்பலின் உறுப்பினர் ஒருவர் ஆசை வார்த்தை கூறியுள்ளார் இதை நம்பிய அந்த இளம்பெண் சுவாஷியா பிராந்தியத்தில் இருந்து மாஸ்கோ நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
தொடர்ந்து அந்த 16 வயது பெண்ணை தொழிலதிபர் ஒருவருடன் சந்திக்க யூரி கும்பல் ஏற்பாடு செய்துள்ளது. ரஷ்யாவில் 16 வயதுக்கு உட்பட்டவர்களுடன் உறவு வைத்துக் கொள்வது என்பது சட்டவிரோதமாகும்.
இந்த நிலையில் அந்த இளம்பெண் தொழிலதிபர் ஒருவருடன் சந்திக்க ஏற்பாடு செய்ததுடன், அவரிடம் சுமார் 6,300 பவுண்டுகள் கட்டணமாக அந்த கும்பல் கோரியுள்ளது. ஆனால் தொழிலதிபர் என்ற பெயரில் அந்த சந்திப்புக்கு சென்றவர் உளவு அளதிகாரி என யூரி கும்பல் அறிந்திருக்கவில்லை.
யூரி கும்பலிடம் இருந்து, அவர்கள் கேட்ட தொகைக்கு இளம்பெண்களை வாங்கினால், பின்னர் அவர்களின் முழு பொறுப்பும் வாங்குபவர்களுக்கே என்பது அந்த கும்பலின் எழுதப்படாத சட்டமாகும். இதனிடையே, அந்த உளவு அதிகாரி அவர்கள் கேட்ட தொகையை அளித்து அந்த பெண்ணை மீட்டுள்ளார்.
தொடர்ந்து அந்த யூரி கும்பலின் 32 வயது நபரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். மீட்கப்பட்ட 16 வயது பாடசாலை மாணவி, அவரது குடும்பத்தில் எவரிடமும் தாம் மாஸ்கோ செல்வதாகவும், தொழிலதிபரை சந்திக்க செல்வதாகவும் தெரிவிக்கவில்லை எனவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தற்போது அவர் மருத்துவ சோதனைக்கு பின்னர், உளவியல் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு, குடும்பத்துடன் பின்னர் அனுப்பி வைக்கப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.