கருப்பு பணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்ததாக மணிக்கணக்கில் டிவியில் தன்னுடைய சாதனையை பேசிவரும் பிரதமர் மோடி என்னுடன் பாராளுமன்றத்தில் நேருக்கு நேர் வாக்குவாதம் செய்ய தயாரா? என காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி சவால் விட்டுள்ளார்.
இந்த சவாலுக்கு மோடியின் தரப்பில் இருந்து இதுவரை எவ்வித பதிலும் இல்லை. ,மேலும் ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் எவ்வித பதிலும் அளிக்க மாட்டார் என்று பாஜக வட்டாரம் கூறுகின்றது
இந்நிலையில் ரூபாய் நோட்டு அதிரடியை அடுத்து மேலும் சில அதிரடியை அறிவிக்கவுள்ளதாகவும், ரூபாய் நோட்டு விவகாரம் ஒரு சின்ன புள்ளிதான் என்றும் இன்னும் பெரிய கோலத்தை மோடி போடும்போது கருப்புபண முதலாளிகள் அதிர்ச்சி அடைவார்கள் என்றும் கூறப்படுகிறது.