உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பில் அரச புலனாய்வு பிரிவினரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் சில விடயங்களை நிராகரிக்க சிலர் முயற்சிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் மக்கள் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதன் மூலம் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு உதவும் நடவடிக்கை ஒன்றே முன்னெடுக்கப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட குற்ற விசாரணை பிரிவினர் வழங்கிய அறிக்கையில் ரிசாத் பதியூதின் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கை சட்ட மா அதிபர் மற்றும் சபாநாயகரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.
ரிசாத் பதியூதினுக்கு எதிராக 300 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. , அந்த குற்றச்சாட்டில் பல குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது.
சில குற்றச்சாட்டுகள் சுமத்துவதற்கு காரணங்களே இல்லை. அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளும் இல்லை என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.