Loading...
சுவீடனில் இடம்பெற்ற விமான விபத்தில் 9 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
சுவீடன் நாட்டின் வடக்கு பகுதியில் வானத்தில் இருந்து பாரசூட் மூலம் குதித்து சாகசம் செய்வதற்காக உமியா நகர விமான நிலையத்தில் இருந்து சிலர் இன்று ஒரு சிறிய ரக விமானத்தில் சென்றனர்.
Loading...
உள்நாட்டு நேரப்படி பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்டு சென்ற விமானம் சுமார் அரை மணி நேரத்தில் ஒரு தீவுப்பகுதியை நெருங்கியபோது, திடீரென்று உமியா ஆற்றங்கரையோரம் உள்ள சதுப்பு நிலத்தில் கீழே விழந்து நொருங்கியது.
சுவீடன் நாட்டின் சில ஊடகங்கள் விமானம் ஆற்றுக்குள் பாய்ந்ததாகவும் செய்தி வெளியிட்டு வரும் நிலையில் அந்த விமானத்தில் இருந்த 9 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Loading...