இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ள நிலையில் அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் குறித்து தெரியவந்துள்ளது.
கிரிக்கெட்டை கண்டுப்பிடித்த இங்கிலாந்து பல ஆண்டுகளாக உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்தது.
இந்நிலையில் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து முதல்முறையாக கோப்பையை வென்று சாதனையை படைத்தது.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இயக்குனருமான ஆண்ட்ரூ ஸ்டரஸ் தான்.
கடந்த 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி மிக மோசமாக விளையாடிய நிலையில் அணியின் செயல்பாடு மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது.
அப்போது இங்கிலாந்து அணியின் இயக்குனராக இருந்தவர் பவுல் டவுட்டன்.
அணியின் தோல்வி காரணமாக பவுலுக்கு பதிலாக ஆண்ட்ரூ ஸ்டரஸ் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
இயக்குனர் பொறுப்பை ஏற்ற பின்னர் ஆண்ட்ரு மேற்கொண்ட நடவடிக்கை எல்லாமே அதிரடி ரகம் தான்.
முதலில் இங்கிலாந்து பயிற்சியாளராக இருந்த பீட்டர் மூர்ஸை நீக்கிய ஆண்ட்ரு, டிரீவர் பெய்லீஸை பயிற்சியாளராக நியமித்தார்.
பெய்லீஸ் ஏற்கனவே இலங்கை தொடர் மற்றும் ஐபிஎல் தொடரில் தனது திறமையை நிரூபித்த நிலையிலேயே அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதன்பின்னர் அணியில் பல அதிரடி மாறுதல்களை ஆண்ட்ரூ மேற்கொண்டார்.
அதே போல தற்போது இங்கிலாந்து அணியின் கேப்டனாக உள்ள இயன் மோர்கனை தேர்வு செய்ததும் ஆண்ட்ரு தான்.
இந்த சூழலில் தான் திடீரென ஆண்ட்ரூவின் மனைவி உயிரிழந்தார், இந்த துக்கமான சூழலிலும் அணியை மேம்படுத்த நினைத்தார் ஆண்ட்ரு.
பின்னர் தனது பொறுப்பை ஆஸ்லே கில்ஸிடம் ஒப்படைத்தார்.
இன்று பலம் வாய்ந்த அணியாக மாறி உலகக்கோப்பையை இங்கிலாந்து வென்றதற்கு மிக முக்கிய காரணம் ஆண்ட்ரு தான்.
அவரால் தான் இங்கிலாந்து வெற்றிகளை குவித்தது என முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்