இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் அணியின் டோனி மற்றும் கோஹ்லி இடம் இல்லாததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடரில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அரையிறுதி வரை சென்று தோல்வியை சந்தித்தது.
இந்த தொடரில் சேசிங் கிங் என்றழைக்கப்படும் கோஹ்லி அந்தளவிற்கு போட்டியை சிறப்பாக முடித்து தரவில்லை. அதுமட்டுமின்றி டோனியும் முக்கியமான போட்டிகளி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
இதன் காரணமாக டோனி ஓய்வு பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்நிலையில் நேற்று வெளியான ஐசிசி அணியிலும் கோஹ்லி மற்றும் டோனிக்கு இடமளிக்காமல் ரோகித் மற்றும் பும்ராவுக்கு இடம் கொடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தற்போது சச்சின் தன்னுடைய உலகக்கோப்பை அணியை அறிவித்துள்ளார். அதில் கோஹ்லி-டோனி இடம் பெறவில்லை. ரோகித், ஜடேஜா மற்றும் பும்ரா ஆகிய இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து உலகக்கோப்பை அணியை தேர்வு செய்யும் வீரர்களின் பட்டியலில் ரோகித்தின் பெயர் இடம் பெற்று வருவதால், அவர் பக்கம் அதிஷ்ட காற்று வீசி வருகிறது. அதுமட்டுமின்றி இனி இந்திய அணியில் சுழற்சி முறையில் கேப்டன்களை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகவும், அதில் கோஹ்லியை விட ரோகித்துக்கே அதிக பேர் ஆதரவாக பேசுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
சச்சின் தேர்வு செய்துள்ள அணி, கனே வில்லியம்சன் (கேப்டன்), ரோகித் சர்மா, பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), விராத் கோலி, ஷகிப் அல் ஹசன், பென் ஸ்டோக் ஸ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, மிட்செல் ஸ்டார்க், பும்ரா, ஜோஃப்ரா ஆர்ச்சர்.