இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு பிரித்தானிய இளவரசியும், இளவரசர் சார்லஸின் மனைவியுமான கமீலா கேக்-கை பரிசாக அனுப்பியது தெரியவந்துள்ளது.
2019ஆம் ஆண்டு உலக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில் இங்கிலாந்து வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில் பிரித்தானிய இளவரசியும், இளவரசர் சார்லஸின் மனைவியுமான கமீலா கேக்-கை இங்கிலாந்து அணிக்கு பரிசாக அனுப்பியுள்ளார்.
இறுதி போட்டியின் போதே இப்பரிசை அவர் அனுப்பியுள்ளார்.
கமீலா அனுப்பியது சாதாரண கேக் கிடையாது, அதில் இறுதி அட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் விளையாடுகிறது என்பதை குறிக்கும் வகையில் அந்த இரு அணித்தலைவர்கள் நிற்பது போலவும் நடுவில் உலகக்கோப்பையும் உள்ளது.
அதே போல உலகக்கோப்பையில் பங்குபெற்ற இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட அனைத்து அணிகளையும் கெளரவிக்கும் விதத்தில் அந்த நாடுகளின் தேசிய கொடிகளும் கேக்கில் இடம்பெற்றுள்ளது.