தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிரபலமான சலூன் ஒன்றில் வேலை பார்த்து வந்தவர் ராஜா(30)
தனது மாமன் மகள் சந்தியாவை திருமணம் செய்துகொண்ட நிலையில், அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், அவர் வேலைபார்த்து சலூனிலிருந்து தேனிக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அங்கு ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு தனக்கு திருமணம் நடந்ததை மறைத்து தனலட்சுமி என்பவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார்.
இது மட்டுமல்லாது, மற்றொரு ஆதரவற்ற பெண்ணான கவியா என்பவரையும் ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு நீண்ட நாட்களாக உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்நிலையில், புதுச்சேரிக்கு பணியிடை மாற்றமான ராஜா அங்கு ஒரு விடுதி எடுத்து தனது மூன்றாவது மனைவியான காவியாவுடன் உல்லாசமாக இருக்க நினைத்து அவரை அழைத்துள்ளார்.
ஆனால், காவியா விடுதிக்கு வர மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த ராஜா விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பின்னர் கணவர் இறந்த செய்திகேட்டு மூவரும் விடுதிக்கு வந்து மூவரும் இவர் எனது கணவர் என சொந்தம் கொண்டாட போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.