திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கணவனுக்கு தெரியாமல் தொலைபேசி பயன்படுத்திய மனைவியை தாக்கி காயப்படுத்திய கணவன் ஒருவரை இம்மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.
கூம்புகார், பாலையூற்று பகுதியைச்சேர்ந்த 21 வயதுடைய ஒருவரே இன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கணவனின் பேச்சினை மீறி மனைவி திருட்டுத் தனமாக தொலைபேசியை வைத்திருந்த நிலையில் அதனை கண்ட கணவன் மனைவியை தாக்கி காயப்படுத்தியுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபரின் மனைவி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.