உலகக் கோப்பையை விட ஆஷஸ் தொடர் தான் முக்கியம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில், இங்கிலாந்து அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, மிகவும் எதிர்பார்க்கப்படும் தொடரான ஆஷஸில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடர் வரும் ஆகஸ்ட் 1ஆம் திகதி தொடங்குகிறது. இந்த தொடரில் எப்போதும் அனல் பறக்கும். இந்நிலையில், உலகக் கோப்பையை விட ஆஷஸ் போட்டியை வெல்வதே எங்களுக்கு முக்கியம் என்று இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘2019ஆம் ஆண்டு எங்களுக்கான ஆண்டு. உலகக் கோப்பையை தட்டிச் சென்றது போல் ஆஷஸ் கோப்பையையும் வெல்வோம். அதற்காக ஒவ்வொரு வீரர்களும் களத்தில் இறங்க உள்ளனர்.
உலகக் கோப்பையை வென்ற அதே உற்சாகத்துடன், அவுஸ்திரேலிய அணியின் டெஸ்ட் தொடரை எதிர்கொள்வோம். உலகக் கோப்பையை விட ஆஷஸ் போட்டியை வெல்வதே எங்களுக்கு மிக உயரிய இலக்கு’ என தெரிவித்துள்ளார்.