மலையக பாடசாலைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் முகமாக இன்று நுவரெலியா மற்றும் அட்டன் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 10 பாடசாலைகளுக்கான டிஜிட்டல் தொழில்நுட்ப கருவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த கருவி ஒன்றின் பெறுமதி தலா 45 ஆயிரம் ரூபாவாகும். இந்த கருவிகள் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி ராதாகிருஷ்ணனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆர்.ராஜாராம் கலந்துகொண்டு டிஜிட்டல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
இவரோடு நுவரெலியா வலயக் கல்விப் பணிமனையின் மேலதிக வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.மோகன்ராஜ், மலையக ஆசிரியர் முன்னணியின் செயலாளர் ரவீந்திரன் உட்பட பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்களும் கலந்து கொண்டனர்.