கிளிநொச்சி அறிவியல்நகரில் இயங்குகின்ற இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் தொழிற் பயிற்சிகளை முடித்துக்கொண்ட 231 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் முதலாவது நிகழ்வு இன்று(18) இடம்பெற்றது.
2016 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த நிறுவனத்திலிருந்து NVQ தரம் ஐந்து வரை பயிற்சிகளை முடித்து வெளியேறுகின்ற முதலாது தொகுதி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
மெக்கானிக்கல் தொழிநுட்பம், மோட்டார் மெக்கானிக்கல் தொழிநுட்பம், இலத்திரனியல் மற்றும் மின்னியல் தொழிநுட்பம், தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம், கட்டுமான தொழிநுட்பம், உணவு தயாரிப்பு தொழிநுட்பம் போன்ற துறைகளில் பயிற்களை நிறைவு செய்த மாணவர்களே சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர். இதில் 158 மாணவர்கள் NVQ 5 டிப்ளோமா சான்றிதழ்களையும், 73 மாணவர்கள் NVQ மூன்று மற்றும் நான்கு தர சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் தலைவர் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் நஸிர் அஹமட், உப தலைவர் கிமாலி ஜினதாஸ, இலங்கைக்கான சுவிஸ் தூதுவர்,கிளிநொச்சி இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின் அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.