Loading...
ஜப்பானில் சாப்பாட்டு போட்டி பிரபலம். அதிக வேகத்தில் நிறைய சாப்பிட்டு வெற்றி பொறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். எனவே அதில் பலர் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். அது போன்ற சாப்பாட்டு போட்டி ஹிக்கோன் நகரில் சமீபத்தில் நடந்தது.
3 நிமிடத்தில் 4 சோற்று உருண்டைகளை விழுங்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. அதை ஏற்று பலர் கலந்து கொண்டு சோற்று உருண்டைகளை அவசர அவசரமாக விழுங்கினர்.
Loading...
அப்போது போட்டியில் பங்கேற்ற வாலிபரின் தொண்டையில் சோற்று உருண்டை சிக்கியது. இதனால் மூச்சு திணறிய அவர் மயங்கி விழுந்தார்.
உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்குதீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் போட்டியாளர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
Loading...