Loading...
பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளாகி 23 வயதுடைய இளைஞன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளார்.
வேலை முடித்து வீடு திரும்பிய இளைஞன் வீதியில் நின்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த போது, வீதியால் வந்த போக்குவரத்து பொலிஸார் மூவர் இளைஞனைத் தாக்கியுள்ளனர்.
Loading...
இந்நிலையில் இளைஞன் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்ற போது, பொலிஸ் நிலையத்தில் அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இளைஞனை மருத்துவமனையில் பார்வையிட்ட பொலிஸார் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...