Loading...
நாட்டின் பல பகுதிகளில் கடுமையான மழை மற்றும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் இதுவரை 5 போ் உயிாிழந்துள்ளனா்.
அந்தவகையில் ஹம்பாந்தோட்டையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் தாய் மகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
சூரியவெவ 11ஆம் மைல்கல் பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
Loading...
முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தவர்களே இதில் உய்ரிழந்துள்ளனர்.
31 வயதான தாய், அவரது மகள் மற்றும் இன்னுமொரு பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் நுவரெலியாவில் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இரட்டை சகோதரிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது
Loading...