Loading...
சீனாவில் மனித முகம் போன்ற தோற்றம் கொண்ட சிலந்தி ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சீனாவின் பிரபல செய்தித்தாளான சீனா டெய்லி தனது ட்விட்டர் பக்கத்தில் மனித முகம் தோற்றம் கொண்ட சிலந்தி ஒன்றின் வீடியோவைப் பதிவிட்டது. அந்த வீடியோவில் மனிதர்களைப் போன்று கண்கள் மற்றும் வாயுடன் அந்த சிலந்தியின் பின்பகுதி காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
Loading...
இந்த சிலந்தி சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள யுனான்ஜாங் நகரில் எடுக்கப்பட்ட வீடியோ என்று சீனா டெய்லி தெரிவித்துள்ளது.
இந்த சிலந்தி குறித்து பல்வேறு கருத்துகளை நெட்டிசன்கள் தெரிவித்து வந்த நிலையில் இந்த சிலந்தி Ebrechtella tricuspidata இனத்தைச் சார்ந்தது என்று தெரியவந்துள்ளது.
Loading...