கர்ப்பமாக இருக்கும் போது ஒவ்வொரு ஊட்டச்சத்தும் ஒவ்வொரு செயல்பாட்டிற்கு அவசியமானது. அதில் ஒன்று தான் பொட்டாசியம். கர்ப்ப காலத்தில் போதிய அளவில் பொட்டாசியம் உடலுக்கு கிடைக்க வேண்டும்.
ஏனெனில் பொட்டாசிய சத்தானது உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையைப் பராமரிக்கும் முக்கிய பணியை செய்கிறது. இச்சத்து சிசுவின் வளர்ச்சிக்கும் முக்கியமானது.
அதற்காக பொட்டாசிய சத்தை அளவுக்கு அதிகமாக எடுக்கக்கூடாது. அது ஹைபர்கலீமியாவை ஏற்படுத்திவிடும். எனவே சரியான அளவில் எடுக்க வேண்டும்.
இதர பணி பொட்டாசிய சத்து தசைகளைச் சுருக்கவும், நரம்புகள் முழுவதும் சமிக்ஞைகளைக் கடத்துவதும் பணியையும் செய்யும். மேலும் இது இரத்த அழுத்த அளவை சீராகப் பராமரிக்கவும் உதவும்.
கால் பிடிப்புகள் கர்ப்ப காலத்தில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும் போது, உடலில் பொட்டாசிய சத்து போதுமான அளவில் இருந்தால், இரத்தத்தில் உள்ள கெமிக்கல்கள் சமநிலையுடன் இருக்கும்.
மேலும் பொட்டாசியம் கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் பிடிப்புக்களைக் குறைக்கும். எவ்வளவு பொட்டாசியம் எடுக்க வேண்டும்? கர்ப்ப காலத்தில் ஒரு நாளைக்கு 4700 மிகி வரை பொட்டாசியம் எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.
அதுவே தாய்ப்பால் கொடுப்பவர்களாக இருந்தால், ஒரு நாளைக்கு 5000 மிகி வரை உட்கொள்ளலாம்.உடலில் எப்போது பொட்டாசிய அளவு குறையும்?
கர்ப்ப காலத்தில் வயிற்றுப் போக்கு அல்லது வாந்தியால் அதிகம் கஷ்டப்பட்டால், உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைய ஆரம்பிக்கும்.
பொட்டாசிய குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் கர்ப்ப காலத்தில் பொட்டாசியம் குறைவாக இருப்பின் சோர்வு, மலச்சிக்கல், உடல் பலவீனம், தசைப் பிடிப்புகள், மன இறுக்கம், வறட்சியான சருமம், தாழ் இரத்த அழுத்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
நீர் வீக்கம் கர்ப்பத்தின் 7-9 மாதங்களில் உடலில் பொட்டாசியம் மிகவும் குறைவாக இருந்தால், உடலில் நீர் வீக்கம் ஏற்படும். இம்மாதிரியான நேரங்களில் மருத்துவரை உடனே சந்தியுங்கள்.