2014 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமையிலான ஆட்சியின் போது 250 அரச நிறுவனங்களில் அதிக இழப்பு ஏற்ப்பட்டுள்ளதாக இன்றைய தினம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அரச பொது முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரான் விக்ரமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த 250 நிறுவனங்களின் மூலம் 600 பில்லியன் நட்டம் ஏற்ப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் தலையீடு மற்றும் முறையற்ற நிர்வாகம் காரணமாகவே இந்த இழப்பு ஏற்ப்பட்டுள்ளதாக அரச பொது முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரான் விக்ரமரத்ன கூறியுள்ளார்.
மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.