சுகவீனப் போராட்டம் நடாத்தி மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் ஆசிரியர்கள் தங்களது மனசாட்சியை தொட்டுபார்த்தால் குறித்த வேலைநிறுத்தம் நியாயமற்றது என்பதை உணர்ந்து கொள்வார்கள் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சின் ஆதரவுடன் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிரிஉல்ல, ஹென்டியகல, ரத்னபால மஹா வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில் இருந்ததை விடவும், நாம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை 106 சதவீதத்தினால் அதிகரித்துள்ளோம்.
ஆசிரியர் தரப்படுத்தலில், முதலாம் வகுப்பு ஆசிரியர்களின் ஆரம்ப சம்பளம் 21,750 ரூபாவாகவே காணப்பட்டது. எனினும், அது தற்போது சிரேஷ்டத்துவத்தின் பிரகாரம் சகல கொடுப்பனவுகளுடன் 81,950 ரூபா வரை பெற்று வருவதாகவும் கல்வி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.