வவுனியா ஈரப்பெரியகுளம் புகையிரதக்கடவையில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கடந்த 17ஆம் திகதி வவுனியா பொது வைத்தியசாலை விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு (19.7) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 60 தொடக்கம் 65வயது மதிக்கத்தக்க இந்த வயோதிபரை இனங்காணுமாறு வைத்தியசாலை நிர்வாகத்தினர் நேற்று முன்தினம் அறிவித்திருந்தனர்.
எனினும் இன்றுவரையில் குறித்த வயோதிபரின் விபரங்கள் எவையும் கிடைக்கவில்லை நேற்று இரவு சிகிச்சை பலனின்றி வயோதிபர் உயிரிழந்துள்ளதாகவும் இவர் யார் என்பது குறித்து எவரும் உரிமை கோர முன்வரவில்லை. தற்போது சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. உரியவர்கள் வந்து பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.