ஈரானுக்கும் – அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து, பிராந்திய நாடுகளின் பாதுகாப்புக் கருதி சவுதி அரேபியாவுக்கு தனது படையை அனுப்ப அமெரிக்கா எடுத்த தீர்மானத்துக்கு, சவுதி தனது இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.
சவுதி மன்னர் சல்மான் இதற்கு தனது அனுமதியை வழங்கியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை பிரித்தானியாவின் எண்ணெய்க் கப்பலை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததாக ஈரான் அறிவித்திருந்தது. அத்துடன், ஈரானின் ட்ரோனர் கருவியை அமெரிக்கா தாக்கி அழித்ததாக டொனல்ட் டிரம்ப் விடுத்திருந்த அறிவிப்பை ஈரான் மறுத்திருந்தது.
சவுதிக்கு அமெரிக்க படையினர் 500 பேர் முதல் கட்டமாகவும் இரண்டாம் கட்டத்தில் மேலும் 500 பேரை அனுப்ப தயாராக இருப்பதாக பென்டகன் தகவல்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.