உடலின் முறையான செயல்பாட்டிற்கு சிறுநீரகங்களின் ஆரோக்கியம் முக்கிய பங்கை வகிக்கிறது. சிறுநீரகங்கள் கழிவுகளைப் பிரித்தெடுத்து வெளியேற்றும் முக்கிய பணியை செய்வதால், இதனை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
அதற்கு சிறுநீரகங்களை சுத்தம் செய்யும் உணவுகள் மற்றும் பானங்களை அடிக்கடி உட்கொள்ள வேண்டும். தற்போது எங்கும் ஆரோக்கியமற்ற உணவுகள் இருப்பதால், சிறுநீரகங்களில் கழிவுகளின் தேக்கம் அதிகரித்து, சிறுநீரகங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
அதோடு புகைப்பிடிப்து, மது அருந்துவது, போதிய நீரைப் பருகாமல் இருப்பது போன்றவற்றாலும், சிறுநீரகங்களில் கழிகளின் தேக்கம் அதிகரிக்கிறது. இங்கு சிறுநீரகங்களை சுத்தம் செய்ய உதவும் பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.அவற்றை அடிக்கடிப் பருகினால், சிறுநீரகங்கள் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
வெண்டைக்காய் – 2
தண்ணீர் – தேவையான அளவு
வெண்டைக்காயின் இரு முனைகளையும் நீக்கிவிட்டு, நீரில் போட்டு, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில், காலை உணவு உண்பதற்கு 30 நிமிடத்திற்கு முன் குடிக்க வேண்டும். இப்படி ஏழு நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகங்கள் சுத்தமாகி, அதன் செயல்பாடு மேம்பட்டிருப்பதைக் காணலாம்.
பார்ஸ்லி – சிறிது
நீர் – தேவையான அளவு
முதலில் பார்ஸ்லியை நீரில் நன்கு கழுவிவிட்டு, பின் அதனை துண்டுகளாக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, பின் 5-10 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கி, குளிர்ந்ததும் வடிகட்டி ஃப்ரிட்ஜி ல் வைத்து, மறுநாள் காலையில் ஒரு கப் குடிக்க வேண்டும். இப்படி சில நாட்கள் தொடர்ந்து செய்து வர, உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறி, உடலில் ஆற்றல் முழுமையாக நிறைந்திருக்கும்.
திராட்சையில் நீர்ப்பெருக்கி பண்புகள் உள்ளது. இதன் ஜூஸை ஒருவர் தினமும் குடித்து வந்தால், சிறுநீரகங்களில் உள்ள அழுக்குகள் அவ்வப்போது வெளியேற்றப்பட்டு, சிறுநீரகங்களின் ஆரோக்கியம் மேம்படும்.