காட்டு விலங்குகளை கூண்டுகளுள் பூட்டி வைத்து வேடிக்கை காட்டுவது என்பது இப்போது ஒரு வாடிக்கையாகவே இருக்கின்றது. ஆனால் இவ்வாறு காட்டு விலங்குகளை கட்டிப் போடுவதெல்லாம் மிருக வதைச் சட்டத்திற்குள் தற்போது உள்ளடக்கப்பட்டு அவற்றினை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெறுகின்றன.
இருந்தும் தற்போதைய இளைஞர்கள் கொடிய விலங்குகளுடன் நின்று புகைப்படம் எடுப்பதையெல்லாம் ஒரு வீரமாகக் கருதுகின்றனர். இவ்வாறு தனது உணவை எடுத்துக்கொண்டிருக்கும் சிங்கம் ஒன்றுடன் படம் எடுப்பதற்காக அதனை நண்பனாக்க முயன்ற இளைஞனை கொடூரமாக தாக்கியுள்ளது.
இச் சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை சவுதி அரேபியாவில் புலி ஒன்று ஐந்து வயது சிறுமியை தாக்கிய சம்பவம் ஒன்று இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருந்தமை தெரிந்ததே. எனவே மிருகக்காட்சி சாலைகளுக்கு செல்லும்போது மிகவும் அவதானமாக இருக்கவும்.